கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்..! குவியும் பாராட்டு!!

 
Assam

அசாமில் கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக முதுகில் சுமந்து சென்ற மருமகளுக்கு சமூகவலை தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் 75 வயதான துலேஷ்வர் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவரது மருமகள் நிகாரிகா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று யோசித்த அவர் சிறிதும் தாமதிக்காமல் தன் முதுகில் சுமந்து சென்று அருகில் இருந்த வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்நிலையில் மாமனாரை முதுகில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட மருமகள் நிகாரிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

From around the web