மாந்திரீகம் செய்த தம்பதி.. அடித்துக்கொன்று காட்டில் வீசய பக்கத்துவீட்டு தம்பதி!!

 
Couple-killed-over-suspected-witchcraft-in-Jharkhand

குழந்தையின்மை, மனைவியின் உடல்நலக்குறைவுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவந்த தம்பதியர் மாந்திரீகம் செய்ததே காரணம் என நினைத்து அவர்களை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் சிம்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மால்கோ முண்டா (வயது 60). இவரது மனைவி லாங்டா ஹன்சபுர்தி (வயது 55). இவர்கள் தாங்கள் வசித்துவந்த கிராமத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதியர் மாந்திரீகம் செய்யும் வேலையிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த மங்லோ-லாங்டா வசித்து வந்த வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் - மனைவி மட்டுமே இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும், அந்த பெண்ணுக்கு அடிக்கடி உடலநலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

மால்கோ-லாங்டா ஆகிய இருவரும் மாந்திரீகம் வைத்து தனது மனைவிக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தியதாகவும், தங்களுக்கு குழந்தை இல்லை எனவும் பக்கத்துவீட்டில் வசித்து வந்த அந்த நபர் கருத்தியுள்ளார். இதனால், மால்கோ-லாங்டாவுக்கும் அவர்களின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த பெண்ணின் கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்கத்துவீட்டில் வசித்து வந்த ஆண் நபர் தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கடந்த 6-ம் தேதி மால்கோ-லாங்டா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியின் உடநலக்குறைவுக்கும், குழந்தையின்மைக்கும் மால்கோ-லாங்டா மாந்திரீகம் செய்ததே காரணம் என எண்ணி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்த நபர் தனது உறவினர்களுடன் இணைந்து கும்பலாக தாக்கியுள்ளார். இதில், தம்பதியரான மால்கோ-லாங்டா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் மால்கோ - லாங்டாவை அருகில் உள்ள காட்டுக்குள் வீசியுள்ளனர். தாக்குதலால் படுகாயமடைந்த கணவன் மனைவியான மங்லோ மற்றும் லாங்டா பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, மால்கோ மற்றும் லாங்டாவின் வீடு பூட்டி இருப்பதையும் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காணாமல் போனது குறித்தும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மால்கோ மற்றும் லாங்டாவை அவரது பக்கத்துவீட்டுக்காரரே உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.     

குழந்தையின்மை, மனைவியின் உடல்நலக்குறைவுக்கு மால்கோ மற்றும் லாங்டாதான் காரணம் என நினைத்து  பக்கத்துவீட்டில் வசித்து வந்த நபரே உறவினர்களுடன் சேர்ந்து தம்பதியை அடித்துக்கொன்றிப்பது தெரியவந்தது.

இதனால், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், மால்கோ மற்றும் லாங்டாவை அடித்துக்கொலை செய்த தம்பதியரின் பக்கத்துவீட்டுக்கார் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

From around the web