கல்லூரி வளாகத்திற்குள் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

 
Kerala

கேரளாவில் கல்லூரி வளாகத்தில் வைத்து காதலியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால், ரத்தம் வெளியேறி அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்தநிலையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடவில்லை. காவல்துறை வந்து அவரைக் கைது செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala

குற்றம் சாட்டப்பட்டவர் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜூ என அடையாளம் காணப்பட்டார். உயிரிழந்த மாணவி 24 வயது நித்தின மோல் என அறியப்படுகிறார்.

இருவரும் கோட்டயத்தில் உள்ள பால செயின்ட் தாமஸ் கல்லூரியில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆவர்.

அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலை இறுதி செமஸ்டர் தேர்வுக்கு கல்லூரிக்கு வந்தனர். நித்தினா தேர்வு மையத்தை விட்டு வெளியேறும்போது, ​​பைஜு பேப்பர் கட்டரைப் பயன்படுத்தி அவரை கொடூரமாக கொலை செய்தார்.

பல மாணவர்களின் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web