மத்திய பிரதேசத்தில் கொரோனா விதிமுறையை மீறி கோவில் விழா... 17 பேர் மீது வழக்கு பதிவு!

 
Madhya-Pradesh

மத்திய பிரதேசத்தில் கொரோனா விதிமுறையை மீறி கோவில் விழா நடத்திய 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்த வகையில் கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான்கு பேருக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.‌

இந்த நிலையில் அங்குள்ள ரட்லாம் மாவட்டத்தில் பார்போட்னா என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கலச யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கலசங்களில் புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கோவில் பூசாரி மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.‌


 

From around the web