கர்நாடக புதிய ஆளுநராக  பதவியேற்றார் தாவர்சந்த் கெலாட்!!

 
Thawarchand-Gehlot

கர்நாடக புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

கர்நாடக மாநில ஆளுநராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆளுநர் பதவியில் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, கர்நாடகத்திற்கும் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதாவது ஒன்றிய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், கர்நாடகத்தின் 19-வது ஆளுநராக தாவர்சந்த் கெலாட் இன்று (ஜூலை 11) பதவி ஏற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட்டுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

From around the web