கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை - மருத்துவ நிபுணர்கள் தகவல்

 
Vaccination

கொரோனா தடுப்பூசியை வகையின்றி செலுத்தினால் அது பாதிப்பான விளைவை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த மே 1-ந் தேதியில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை வகையின்றி செலுத்தினால் அது பாதிப்பான விளைவை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளானவருக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியமில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நோய்க்குப் பிறகு தடுப்பூசி செலுத்துவது பயன் தருவதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் செலுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் இளம் வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவது கூடுதல் செலவாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இரண்டாம் அலை ஓயத் தொடங்கிய நிலையில் உடனடியாக செரோ சர்வே எனப்படும் ஆய்வு மூலம் மாவட்ட வாரியாகத் தொற்று பரவலைக் கண்டறிய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

யாருக்குத் தடுப்பூசி தேவை என்று நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை பிரதமர் மோடியிடம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

From around the web