பள்ளிக்கூடம் சென்ற மகன்; மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனார்..!

 
Rape

மத்திய பிரதேசத்தில் மகன் பள்ளிக்கூடம் சென்றதும் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள மியானா காவல் நிலையத்திற்கு வந்த பாதிக்கபட்ட பெண், தனது கணவர் பள்ளிக்குச் சென்றபோது தனது மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இப்போது கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி உள்ளார். தனது மனைவியுடன் புகார் அளிக்க கணவரும் காவல் நிலையம் வந்து இருந்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த அந்த 21 வயது பெண், குணாவை சேர்ந்த 22 வயது வாலிபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.  அவரது கணவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது கணவர் பள்ளிக்குச் சென்றிருந்தபோது மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

தனது மாமனார் பல சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களை அவர், அந்த ஆயுதங்களை காட்டி அச்சுறுத்துவதாகவும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் குடும்பத்தில் உள்ள பல பெண்களை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

போலீசார், முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆனால் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

From around the web