ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’

 
Puducherry

புதுச்சேரி காட்டுக்குப்பம் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தியான இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

ஆய்வின்போது மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் பன்னீர்செல்வம், விமல்ராஜ், சீனுவாசன், வருவாய்த்துறை ஆய்வாளர் முருகையன், கிராம நிர்வாக அதிகாரி அருட்பெருஞ்ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

From around the web