வேறொரு பெண்ணுடன் ஓட்டம்! கடத்தப்பட்டதாக நம்பிய மனைவிக்கு கம்பி நீட்டிய கணவன்!!

 
Odisha

கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் பதிதாபாபன் ப்ரஸ்டி. திருமணமான இவர் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பதிதாபாபன் கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பதிதாபாபன் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கட்டியா ரயில் நிலையத்தில் பெண் ஒருவருடன் இருப்பது தெரியவந்தது.

Odisha

அதன்பின் போலீசார் பிடித்து விசாரித்த போது, இருவரும் காதலித்து வருவதாகவும், குடும்பத்தை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

இவருடன் ஓட்டம் பிடித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் பதிதாபாபன் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதனால் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் கடத்தப்பட்டுவிட்டதாக பதறி போய் புகார் அளித்த மனைவி, அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

From around the web