புதுவையில் ஆட்சி அமைக்கிறார் ரங்கசாமி... எக்சிட் போல் முழு விவரம்!

 
புதுவையில் ஆட்சி அமைக்கிறார் ரங்கசாமி... எக்சிட் போல் முழு விவரம்!

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக, அதிமுக இடம்பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு,

ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ்: என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்ற்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு 11 முதல் 13 இடங்களே கிடைக்கும்.

ஏபிபி - சி வோட்டர்: என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களையும், மற்றவைகள் 1 முதல் 2 இடங்களையும் பிடிக்கும்.

From around the web