கை கொடுக்காத ராமர் கோவில்? அயோத்தியில் பாஜக படு தோல்வி!

 
கை கொடுக்காத ராமர் கோவில்? அயோத்தியில் பாஜக படு தோல்வி!

மேற்கு வங்காளத் தேர்தல் அதிர்ச்சியிலிருந்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மீளாத நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அடுத்த அடி கிடைத்துள்ளது. அதுவும் அவர்கள் ஆசை ஆசையாக கட்டும் ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் தான் இடி விழுந்துள்ளது

அயோத்தி மாவட்ட பஞ்சாயத்து சபையில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வெறும் 8 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. பகுகுண் சமாஜ் கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளது. சுயேட்சைகள் மீதி இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த தோல்வி பாஜகவின் வீழ்ச்சி தொடங்கியுள்ளதைக் காட்டுவதாக உள்ளது. ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் கூட அயோத்தி மாவட்ட மக்கள் பாஜகவை கை கழுவி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடரால் வெளி மாநிலங்களிலிருந்து பெரும்பாலான உ.பி.மக்கள் சொந்த மாநிலத்திற்கு கால்நடையாக திரும்பியதும், வழியில் பலர் உயிரிழக்க நேரிட்டதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய, மாநில பாஜக அரசுகள் மீதான மக்களின் அதிருப்தியைத் தான் இந்த முடிவுகள் காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web