ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து கெலாட் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெலாட், தனது மனைவிக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக தானும் தனிமைப்படுத்தி கொண்டு, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மனைவியை தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.


 

From around the web