கர்நாடகாவில் பாம்பு பிடி வீரரை படமெடுத்து அலற விட்ட ராஜ நாகம்..! வைரல் வீடியோ!!

 
Karnataka

கர்நாடகாவில் வீடு ஒன்றின் கழிவறைக்குள் புகுந்த ராஜநாகம் ஒன்றின் வாலைப் பிடித்து இழுக்க முயன்றபோது அப்பாம்பு திடீரென படமெடுத்து பாம்பு பிடி வீரரை அதிரவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தக் ஷிண கன்னடாவின் பெல்தங்காடியில் உள்ள கோபாலகிருஷ்ண பட் என்பவரது வீட்டின் கழிப்பறைக்குள் பாம்பு புகுந்ததாக வந்த தகவலையடுத்து பாம்பு பிடி வல்லுனரான அசோக் அங்கு சென்றார்.

அப்போது கழிப்பறைக்குள் நுழைய முயற்சித்த பாம்பின் வாலை பிடித்து அசோக் இழுத்தபோது அவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று ராஜநாகம் படமெடுத்து நின்று அவரை கடிக்க முற்பட்டது.

அதில் அதிர்ச்சியடைந்த அசோக் தன் கையில் வைத்திருந்த தடியை வீசியதுடன் சட்டென பின்வாங்கி பாம்பு கடியிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டார்.


 

From around the web