தடையை மீறி லகிம்பூர் பயணம்... கைதாவாரா ராகுல் காந்தி?

 
Rahul-Gandhi

உத்தரபிரதேசத்தில் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க லகிம்பூருக்கு செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு இன்று நேரில் செல்ல உள்ளேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.  

ஆனால், வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கோ அல்லது அதன் அண்டை நகரமான சீதாபூருக்கோ ராகுல் காந்தி செல்ல அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு செல்லும் நோக்கத்தோடு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் தற்போது லக்னோ புறப்பட்டு சென்றுள்ளார். ராகுல்காந்தியுடன் சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பஹல் மற்றும் பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி லக்னோ செல்கின்றனர்.

லகிம்பூர் செல்லும் நோக்கத்தோடு ராகுல் காந்தி லக்னோ புறப்பட்டுள்ளார். ஆனால், ராகுல் காந்தி மற்றும் அவருடன் வரும் பஞ்சாப், சத்தீஸ்கார் முதல்வர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராகுல்காந்தி இன்னும் சிறிது நேரத்தில் லக்னோ விமான நிலையம் வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பரபரபான சூழ்நிலை காணப்படுகிறது.

From around the web