தடுப்புகாவலில் சிறை வைக்கப்பட்ட அறையைக் கூட்டிப் பெருக்கிய பிரியங்கா காந்தி!!

 
Priyanka-Gandhi

உத்தரப்பிரதேசத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடத்தில், பிரியங்கா காந்தி தரையை கூட்டிய பெருக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சம்பவம் அறிந்தவுடன் நேற்று டெல்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் வந்தார்.

லக்கிம்பூருக்குச் செல்லும் வழியில் ஹர்கான் என்னுமிடத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, தீபிந்தர் ஹுடா ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து சீதாப்பூரில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். சிறைவைக்கப்பட்ட அறையைப் பிரியங்கா கூட்டிப் பெருக்கிய காட்சி இணையத்தில் பரவியது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரியங்கா காந்தி, நாம் இருக்கும் அறையை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். அது அரசு அறையாக இருந்தாலும் சரி. என்னுடைய அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் நான் அறையை சுத்தம் செய்தேன், என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க விடாமல் சிறை வைத்ததைக் கண்டித்துப் பிரியங்கா காந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் தன்னைக் கைது செய்த காவல்துறையினர், விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்யாதது ஏன் என வினவினார்.

From around the web