வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

 
FilePic

வடகிழக்கு மாநில முதல்வர்ளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் 2- வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை  40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் முதல்வர்களுடன் பிரதமர் மோடி  ஆலோசனை நடத்த உள்ளார்.

நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

From around the web