காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர்..? சோனியா காந்தி விரைவில் முடிவு

 
PrashantKishor-SoniaGandhi

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை, காங்கிரஸ் கட்சியில் இணைப்பது குறித்து சோனியா காந்தி விரைவில் முடிவு அறிவிப்பார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக பேசி வருகிறார். இது தொடர்பாக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரை ஏற்கனவே அவர் சந்தித்து பேசினார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சிலர் அவரை கட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

எனவே கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது தொடர்பாக கட்சித்தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதிலும் கலவையான பதில்களே கிடைத்து உள்ளன. ராகுல், பிரியங்கா ஆகியோர் இந்த இணைப்புக்கு பச்சைக்கொடி காட்டினாலும் சில தலைவர்கள் இன்னும் நேர்மறையான பதிலை தெரிவிக்கவில்லை.

எனவே இந்த விவகாரத்தில் சோனியா இறுதி முடிவை எடுப்பார் எனவும், இது தொடர்பான முடிவை விரைவில் அவர் அறிவிப்பார் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

From around the web