டெல்லி தேர்தல் : மோடி வாழ்த்து… இணைந்து செயல்பட அரவிந்த் கேஜ்ரிவால் விருப்பம்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றியை தக்க வைத்துக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றாவது தடவையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள். டெல்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி ட்வீட் மூலம் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த்
 

டெல்லி தேர்தல் : மோடி வாழ்த்து… இணைந்து செயல்பட அரவிந்த் கேஜ்ரிவால் விருப்பம்!டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றியை தக்க வைத்துக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றாவது தடவையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள். டெல்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி ட்வீட் மூலம் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால்,  மிக்க நன்றி சார்,  நமது தலைநகரத்தை உண்மையான உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web