நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற திட்டம்

 
Om-Birla

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற உள்ளது.  இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெறும்.

19 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும்.  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நாட்களில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் பற்றி சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற ஒன்றிய  அரசு திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திய எம்.பி.க்களுக்கு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத எம்.பிக்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web