ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பயணி... ஓடிச் சென்று காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்!

 
Nagpur

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

நாக்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரரான முனேஷ் கவுதம் என்பவர் காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மூன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ரயிலில் ஏற முடியாமல் தொங்கியபடி இழுத்துச் செல்லப்பட்டு தண்டவாளத்துக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழ இருந்த நிலையில் ரயில்வே காவலர் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினார்.


 

From around the web