4 வயது மகனை கொலை செய்த பெற்றோர்! பின்னர் தம்பதி எடுத்த அதிரடி முடிவு.. நடந்தது என்ன?

 
Pavur

கேரளாவில் 4 வயது மகனை கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(வயது 39). இவரது மனைவி கிருஷ்ணேந்து(வயது 30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
 

Pavur

வீட்டின் அறையில் சிறுவன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தான். அடுத்த அறையில் சுனிலும் அவரது மனைவிகிருஷ்ணேந்துவும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து சுனிலின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து பரவூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து விட்டு பின்னர் அவர்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நான்கு வயது மகனை கொன்று விட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web