கோயமுத்தூரிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்குச் சென்ற ஆக்சிஜன் ஆலை! இன்று உற்பத்தி தொடக்கம்!!

 
Aiims oxygen

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இரண்டு ஆக்சிஜன் ஆலைகள் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது. டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் இறந்த சோகம் உலகத்தையே உலுக்கியது.

போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் தொடங்கியது. ராணுவ ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனம் (DRDO) மூலம் டெல்லியைச் சுற்றிலும் 5 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனைகளில் நிறுவும் பணி நிறைவு பெற்று இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது.

மேலும் சஃப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹர்டிங்கே மருத்துமனை, ஹரியானா எம்ய்ஸ் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன்கள் நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ப இந்த ஆலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதத்திற்குள் நாடு முழுவதும் 500 ஆக்சிஜன் ஆலைகளை மருத்துவமனைகளில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து இந்தப் பணிகள் நடைபெறுவதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலைகளுக்கான தளவாடங்கள் கோயமுத்தூர்  ட்ரைடண்ட் நியுமேட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.

ஆக, கோயமுத்தூரிலிருந்து தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கே ஆக்சிஜன் கிடைக்கிறது. இதே போன்ற ஆலை தான் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், அது திறக்கப்பட்ட போதே நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மூர்ல் உள்ள நல்ல விசயங்கள் நம்ம கண்ணுக்கு மட்டும் தெரிவதே இல்லையே!

From around the web