ஓசி சரக்கு கேட்டு அலப்பறை... தரமறுத்ததால் கடையைச் சூறையாடிய போதை ஆசாமிகள்!!

 
Puducherry

புதுச்சேரியில் இலவசமாக மது கேட்டு மது கடையை சூறையாடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனியார் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அங்கு வந்த 3 வாலிபர்கள் தங்களுக்கு இலவசமாக மது வேண்டும் என கடைக்காரரிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்குக் கடையிலிருந்தவர் “காசு கொடுத்தால்தான் மது, இலவசமாகக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்த கும்பல் கடையின் ஓரமாக இருந்த காலி பாட்டில்களை எடுத்து கடைமீது வீசினர். மேலும், நாற்காலிகளை உடைத்துச் சேதப்படுத்தினர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மதுக்கடையைச் சூறையாடியது ரஞ்சித், பிரபா, ஸ்டீபன் என தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web