தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை!

 
Diwali

டெல்லியில் நிலவும் அதிகப்படியான காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக கடந்தாண்டை போலவே தீபாவளிக்கு பட்டாசு சேமிக்கவும், விற்கவும், வெடிக்கவும் இந்தாண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும்.

கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால், இந்தாண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

From around the web