இனி இதை வாங்க ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை - ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம்

 
RTO

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.

From around the web