மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை.. எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

 
Mohan-Bhagwat

நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை, எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். இதை உலகிற்கு கற்றுக்கொடுக்கவே நாம் இந்த பாரத மண்ணில் பிறந்துள்ளோம்.

யாருடைய மத வழிபாட்டு முறைகளையும் மாற்றாமல் நமது மதம் சிறந்த மனிதர்களை உருவாக்குகிறது. உலகின் ஆசிரியராக இந்தியா உருவாக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

From around the web