17 மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு! தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு!

 
17 மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு! தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.

இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. எனினும், புதிய கல்வி கொள்கையின் ஆவணம், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவில்லை.

From around the web