பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திடீர் ராஜினாமா

 
Navjot-Singh-Sidhu

நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை திடீர் ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

Sidhu-Resign

இதையடுத்து முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18-ம் தேதி அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் இன்று திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.  அங்கு அவர் பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்லதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக  நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

From around the web