யாதவர்களுடன் முஸ்லீம்கள் கூட்டணி ஓர்க் அவுட் ஆகாது! ஓவைசியின் புதிய கண்டுபிடிப்பு!!

 
Owaisi

இந்திய அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிப்பதில் உத்தரப் பிரதேச மாநிலம் முக்கியத்துவம் உடையது. 80 மக்களவை எம்பிக்கள் இம்மாநிலத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்  கொள்கை சார்ந்த அரசியல் போய் சாதி மதம் சார்ந்த அரசியல் ஊடுருவியுள்ள இங்கு, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க ஹைதராபாத் அசாசுதீன் ஒவைசியும்  களம் குதிக்கிறார்.

ஓவைசி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் மாயாவதி ஏற்கனவே அறிவித்துள்ளார். பீகார் சட்டசபையில்  ஓவைசி கட்சிக்கு 5 எம் எல் ஏ க்கள் உள்ளனர். எனவே உபி மாநிலத்தில் தன கட்சிக்கு கணக்கு துவங்க முனைந்துவிட்டார். உபி மாநில சட்டசபை தேர்தலில் யாதவர்களும் முஸ்லிம்களும் ஓரணியில் நின்றால் எளிதாக வெற்றி கிடைக்கும் என்று  அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கணக்கு போட்டுள்ளது.

லக்னோவில் இந்த பிரேரணை குறித்து   அசாதுதீன் ஒவைசி  கருத்து தெரிவித்தார். “மனதில் வைத்துக்கொள்ளுங்கள், முஸ்லீம் யாதவர் கூட்டணி உபி மாநிலத்தில் ஒர்க் அவுட் ஆகாது,”  என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி  உபி மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உள்ளன. இந்நிலையில் ஒவைசியின் அறிவிப்பு  உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 5 அணிக்கு கட்டியம் கூறுகிறது. 

மதவாதத்தை முறியடிப்போம் என கூவி கொண்டே மதவெறி சக்திகள் தேர்தல் களம் புகுவது யாருக்காக என அப்பாவி வாக்காளர்களுக்கு புரியவில்லை. 

- வி.எச்.கே.ஹரிஹரன்

From around the web