மும்பை அரசு விருந்தினர் இல்லத்தில் விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வர் மகன்!

 
Aditya-Thackeray

மும்பையில் அரசு விருந்தினர் இல்லத்தின் மேல்பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் ஆதித்ய தாக்கரே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மும்பையின் தென் பகுதியில் அரசு விருந்தினர் இல்லம்  சஹாரித்ரி கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான அமைச்சர்கள் அதிகாரிகளின் கூட்டத்தை சஹாத்ரி இல்லத்தில் தான் நடத்தி வருகின்றனர்.

வழக்கம் போல் முதல்வரின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, சஹாத்ரி இல்லத்தில் உள்ள ஹால் ஒன்றில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த போது திடீரென ஹாலுக்கு வெளியில் மிகப்பெரிய சத்தம் கேட்டது.

வெளியில் வந்து பார்த்த போது ஹாலுக்கு வெளியில் ஸ்லாப் இடிந்து விழுந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து உடனே ஆதித்ய தாக்கரே நடத்திக்கொண்டிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மேற்கொண்டு இடியும் நிலையில் ஏதாவது பகுதி இருக்கிறதா என்று முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்படி அடிக்கடி அதிகாரிகளின் கூட்டம் நடக்கும் இல்லத்தில் விபத்து நடந்திருப்பது அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இடிந்து விழுந்த பகுதி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இச்சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web