மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் கொரோனாவுக்கு பலி !

 
மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் கொரோனாவுக்கு பலி !

இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 34.

ஜெதீஷ் லாட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கல பதக்கமும், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரண்டு முறை தங்க பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இந்தியாவின் சார்பில் பல சர்வேதச போட்டிகளில் ஜெகதீஷ் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்து வந்தார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு ஆணழகன் போட்டிகளிலும் வெற்றிபெற்று பதக்கங்களை குவித்துள்ளார்.

மராட்டியத்தை பூர்விகமாக கொண்டவர் பாடி பில்டர் ஜெகதீஷ் லாட். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து வடோதாராவுக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு அவர் சொந்தமாக ஓர் உடற்பயிற்சி கூடத்தையும் தொடங்கி நடத்தி வந்தார்.

இதனிடையே, அண்மையில் ஜெகதீஷ் லாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் கடந்த 4 நாட்களாக குஜராத், வடோதரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

பாடி பில்டரும் இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்றவருமான லாட் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web