கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி... அறிமுகம் செய்தார் மம்தா..!

 
Mamata

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டு வந்துள்ளார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிமுகப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் பதவி இல்லை என்றும், அரசுப் பதவியில் இருப்பவர்கள் கட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

From around the web