மேற்கு வங்கத்தில் தாமரை மலருமா...? எக்சிட் போல் ரிசல்ட் என்ன?

 
மேற்கு வங்கத்தில் தாமரை மலருமா...? எக்சிட் போல் ரிசல்ட் என்ன?

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள சட்டமன்றதேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. ஆட்சியை பிடிக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருந்த மேற்கு வங்கத்தை 2011-ம் ஆண்டு கைப்பற்றினார் மமதா பானர்ஜி. 2016-ம் ஆண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வரானார். இந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வென்று ஆட்சியை தக்கவைக்க பிகே உடன் வியூகம் அமைத்தார்.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆட்சியையும் அரியணையையும் தக்கவைக்க மமதா பானர்ஜி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 134 முதல் 160 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 130 முதல் 156 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. இடது சாரி கூட்டணி 2 இடத்திலும் இதர கட்சி 1 இடத்திலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

ஜான்கிபாத் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 162 முதல் 185 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 104 முதல் 121 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 3 முதல் 9 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக ஜான்கிபாத் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுடே சாணக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 169 முதல் 191 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. பாஜக 97 முதல் 119 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இடது சாரிகள் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் இதர கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

டிவி 9 நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 142 முதல் 152 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. பாஜக 125 முதல் 135 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 26 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

From around the web