தொடர்ந்து 2-வது முறையாக கேரளாவில் இடதுசாரி ஆட்சியைக் கைப்பற்றுகிறது... சாதனை படைக்கிறார் பினராயி விஜயன்!!

 
தொடர்ந்து 2-வது முறையாக கேரளாவில் இடதுசாரி ஆட்சியைக் கைப்பற்றுகிறது... சாதனை படைக்கிறார் பினராயி விஜயன்!!

கேரளாவில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை ஆளும் இடது சாரி  தக்கவைத்துள்ளது.

கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுகு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

கேரளாவில் இடதுசாரி தலைவர்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் உள்ளன. அதில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 இடங்கள் தேவை. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இடதுசாரிகள் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடக் கூடுதல் இடங்களிலேயே முன்னிலை வகித்தது.

இன்று முழுவதும் இதே நிலை தொடர்ந்ததால் கேரளாவில் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி கண்ணூர் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 9 இடங்களில் எல்டிபி முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் திருவனந்தபுரத்தில் 14 தொகுதிகளில் 12 இடங்கள், கொல்லம் மாவட்டத்தில் 11 தொகுதிகளி்ல் 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆலப்புழா மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 7 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 12 தொகுதிகளில் 9 இடங்கள், திருச்சூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 12 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 3 இடங்களில் வெற்றியை மார்க்சிஸ்ட் கூட்டணி உறுதி செய்ய உள்ளது.

இடதுசாரி வேட்பாளரும் தேவஸம்போர்டு அமைச்சருமான கடக்கம்பள்ளி சுரேந்திரன் களக்கூட்டம் தொகுதியில் வெற்றியை நெருங்கியுள்ளார். திருச்சூரில் முன்னிலை பெற்று வந்த பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார், இடதுசாரி வேட்பாளர் பாலச்சந்திரன் முன்னிலை பெற்றுள்ளார்.

From around the web