டெல்லியில் வீடு வீடாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம்... ஒன்றிய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

 
Arvind-Kejriwal

கொரோனா தொற்று சமயத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க ஏன் அனுமதி அளிக்கக் கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு  ஒப்புதல் அளிக்க மறுத்ததாகக் கூறப்படும்  நிலையில், ஒன்றிய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  

இன்று டிஜிட்டல் முறையில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில் , “டெல்லியில் வீடு வீடாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அமல் ஆவதற்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது.” என்றார்.

மேலும் ரேஷன் மாஃபியாக்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகவும் கெஜ்ரிவால் சாடினார்.

From around the web