கர்தாஹா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

 
கர்தாஹா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த  22-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற கர்தாஹா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் காஜல் சின்ஹா போட்டியிட்டார். இந்த நிலையில்,  காஜல்  சின்ஹா அண்மையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானர்.

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஜல் சின்ஹா, தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

காஜல் சின்ஹா மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web