கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன்!!

 
கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன்!!

ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு, இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் 2-ம் அலை உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல அலைகளாக அடுத்து அடுத்து வேகமாக பரவி உலக நாடுகளை திணறடித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட  சோதனைக்கு இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.  

இதற்கு முன்னதாக இந்தியாவில் 3-வது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் இறக்குமதி உரிமம் பெறுவதற்காகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது. தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web