இந்தியாவின் இருமுறை உருமாறிய கொரோனா 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது!!

 
இந்தியாவின் இருமுறை உருமாறிய கொரோனா 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது!!

இந்தியாவில் காணப்படும் இருமுறை உருமாறிய கொரோனா 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா, உருமாற்றம் அடைந்து மேலும் தீவிரம் அடைந்துள்ளது.  இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது. அதே போல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது.

இந்தியாவில் இந்த புயல்வேக கொரோனா பரவலுக்கு இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் (பி.1.617) காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் பரவிய புதிய வகை கொரோனா தொற்று 17-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சராசரியாக 3.50- லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.

From around the web