இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி - அசாதுதீன் ஓவைசி விமர்சனம்

 
Asad-Owaisi

பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பாராபன்கி பகுதியில் எ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியில் தலைவர் ஓவைசி பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய ஓவைசி, “இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி. அவர் தவறுதலாக அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். அரசியலுக்குள் நுழையவில்லையென்றால் திரைத்துறையில் உள்ள அனைத்து விருந்துகளையும் பிரதமர் மோடி வென்றிருப்பார்” என்றார்.

From around the web