தாலிபன்-ஆப்கன் படை மோதலை படம் பிடிக்க சென்ற இந்திய போட்டோஜர்னலிஸ்ட் பலி!!

 
Danish-Siddiqui

காந்தகாரில், தாலிபன்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இந்திய போட்டோஜர்னலிஸ்ட் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான்களுக்கும் இடையே அதிகளவில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தலிபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச்செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார். இதனை இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரீத் மாமுண்ட்சாய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த தனிஷ் சித்திக் தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web