இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவு தடுப்பூசியே ஒதுக்கீடு...!

 
Vaccine

இந்தியாவில் 5-வது பெரிய மாநிலமான தமிழ்நாடு, அதன் மக்கள் தொகைக்கு தகுதியான தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை.

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன.

மே 1-ம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், அவர்களுக்கு உரிய தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஒன்றிய அரசு முன்னதாகவே போதுமான அளவுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு முன்பதிவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டபட்டது.

நாட்டின் மொத்த தடுப்பூசி  36 கோடியைத் தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 11 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் கிடைத்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை 13.3 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இது மே 30-ந் தேதிக்குப் பிறகு மிகக் குறைவான அளவு ஆகும்.

திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் இந்த எண்ணிக்கை 40.4 லட்சமாக  உயர்ந்தது. ஜூன் கடைசி வாரத்தில் சராசரியாக 62.1 லட்சம்  டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தினசரி வழங்கப்பட்டன, இது ஜூலை முதல் சில நாட்களில் 41.8 லட்சமாக குறைந்தது. ஜூலை 5 முதல் 11 வரை, தினசரி சராசரி தடுப்பூசி அளவு மேலும் 35. லட்சமாக அளவுகளாக குறைந்தது.

கேரளா மற்றும் டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை 22 சதவீதமாகவும், பீகார் 71 சதவீதமும், ராஜஸ்தான் மற்றும் வங்காளம் 66 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தடுப்பூசி பற்றாக்குறை 54 சதவீதமாகும். 59 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலங்களில் சில தினசரி தடுப்பூசியில் மோசமான சரிவை சந்தித்து உள்ளன.

கேரளாவும் டெல்லியும் சிறந்த தடுப்பூசி பதிவைக் கொண்ட மாநிலங்களாக விளங்கினாலும், டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு விகிதத்தை எட்டுவதில் இருந்து அவை வெகு தொலைவில் உள்ளன. பஞ்சாபில் தடுப்பூசி பற்றாக்குறை 26 சதவீதமும், கர்நாடகாவில் 30 சதவீதமும், குஜராத் 37 சதவீதமும் உள்ளன.

உத்தரபிரதேசம்-16.1, மராட்டியம்-10, பீகார்-8, மேற்கு வங்கம் -7.9, தமிழ்நாடு-6.3, மத்திய பிரதேசம்-6, ராஜஸ்தான்-5.6, கர்நாடக-5.3, குஜராத்-5.3, ஆந்திரா- 4.3 ஆகிய 10 மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள் தொகை கொண்டுள்ளது.

போதுமான தடுப்பூசி இல்லாததன் காரணமாக மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை வழங்க முடியாமல் ஒன்றிய அரசு திணறிவருகிறது. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களில் மக்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தவந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில்

அந்த கடிதத்தில் நான் தமிழ்நாட்டில் தகுதியுள்ள ஆயிரம் மக்கள் தொகைக்கு இவ்வளவு என வழங்கப்படும் தடுப்பூசி டோஸ்களைப் பொறுத்தமட்டில், குறைந்த அளவே வழங்கப்படும் குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், சிறப்பு ஒதுக்கீடாக தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்காக உங்கள் உடனடி தலையீட்டை கோரியிருந்தேன்.

8-7-2021 வரை தமிழ்நாட்டுக்கு 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக 29 லட்சத்து 18 ஆயிரத்து 110 தடுப்பூசி மருந்துகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஒரு கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 440 தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு மக்கள்தொகைக்கேற்ப தடுப்பூசி கிடைக்காததால், இப்போது தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்தில் தகுதியுள்ள ஆயிரம் மக்கள்தொகைக்கு 302 தடுப்பூசி டோஸ்கள்தான் வழங்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 533, கர்நாடக மாநிலத்தில் 493, ராஜஸ்தான் மாநிலத்தில் 446 என்ற கணக்கில் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படுவதை ஒப்பிடும்போது எங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி டோஸ்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என சுட்டிக்காடி இருந்தார்.

மே 15 அன்று, ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் 20 கோடி தடுப்பூசி டோஸ் ஒதுக்கியது, ஜூலை 14 நிலவரப்படி, மொத்த ஒதுக்கீடு 39.5 கோடி. இந்த ஒதுக்கீடு மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் தடுப்பூசி அதன் தகுதியான மக்கள்தொகையின் விகிதத்தில் மே மாதத்தில் 15 சதவீதமாக ஆக இருந்தது, இப்போது அது 31 சதவீதமாக  இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆயினும்கூட, இது குறைந்த ஒதுக்கீடு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

பாஜக ஆட்சி இல்லாத  மாநிலங்களில் பெரும்பாலானவை வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முறையற்ற தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து கவலை தெரிவித்துள்ளன. ஒதுக்கீடு குறித்த மாநில வாரியான விவரம் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் மே மாதத்திற்குப் பிறகு வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் 5-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் மொத்த பங்கில் வெறும் 5 சதவீதம் பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களும் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் தேசிய சராசரி ஜூலை 13-ம் தேதி நிலவரப்படி 41 சதவீதமாக உள்ளது. ஆயினும், தமிழ்நாட்டில் அதன் தகுதியான மக்கள்தொகையில் வெறும் 31 சதவீதம்  பேருக்கு (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அளவை வழங்க முடிந்தது.

இதேபோன்ற மக்கள் தொகையைக் கொண்ட  கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய  மாநிலங்கள் தடுப்பூசிகளின் தரவை பார்ப்போம் . குஜராத் அதன் மக்கள் தொகையில் 58 சதவீதம்  பேருக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் 53 சதவீதம் மற்றும் ராஜஸ்தானில் 52 சத்வீதம் தடுப்பூசிகள் பெற்றுள்ளன, மத்திய பிரதேசத்தின் 18 க்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் 44  சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்று உள்ளனர். தகுதி வாய்ந்த மக்கள்தொகையின் விகிதத்தில் தமிழ்நாடு 31 சதவீத அளவுகளைப் பெற்றுள்ளது.

கடந்த மாதம், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 216 கோடி டோஸ் என்ற முந்தைய கூற்றுக்கு எதிராக, 2021 டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று கூறியது. தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அந்தந்த மாநிலத்தின் 18-44 வயதுக்கு இடைப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதாகவும் ஒன்றிய அரசு கூறியது.

அதிக மக்கள் தொகை கொண்ட 10 மாநிலங்களில் மொத்தம் 6 மாநிலங்களும் குறைந்த எண்ணிக்கையிலான அளவைப் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், ராஜஸ்தான் (52%), கர்நாடகா (53%), குஜராத் (58%) மற்றும் மத்திய பிரதேசம் (44%) ஆகியவை தேசிய சராசரியான 41% ஐ விட அதிக தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளன.

குறைந்த அளவு தடுப்பூசி போட்ட மாநிலங்கள் - வழங்கபட்ட விகிதம்

ஆந்திரா-44, ஒடிசா-43, மராட்டிய-41, அசாம்-35, பஞ்சாப்-34, மேற்கு வங்கம்-34, ஜார்கண்ட் -31, தமிழ்நாடு -31, உத்தரபிரதேசம்-26, பீகார்-26

18 வயது  பிளஸ் மக்கள்தொகை( 5.8 கோடி) மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐந்தாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.இது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 587 பேர் அடர்த்தி கொண்டது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, ஒன்றிய அரசின் தரவுகளின்படி, இது மராட்டியம், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 4-வது மாநிலமாகும்.

தடுப்பூசிகளை வீணடிப்பதை தமிழ்நாடு வெகுவாக குறைத்து உள்ளது. மொத்தமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 97 சதவீதத்தை ஜூலை 11-ம் தேதி வரை பயன்படுத்தியுள்ளது. இந்த அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு அதிக பங்கிற்கு தகுதியுடையது, ஆனால் தடுப்பூசி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இது முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகும்.

From around the web