சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது..? குழு அமைப்பு

 
CBSE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1-ம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கடந்த 3-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  அந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எந்த முறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது குறித்து 10 நாட்களுக்கு அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும் என குழுவுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

From around the web