ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது... சோதனை முயற்சி நடத்தியதால் 22 நோயாளிகள் பாதிப்பு...?

 
Uttar-Pradesh

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தி சோதனை முயற்சி நடத்தியதால் 22 நோயாளிகள் பாதிக்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பரஸ் என்ற தனியார் மருத்துவமனையின் உரிமையாளரான அரிஞ்சய் ஜெயின் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை என்றும் அரிஞ்சய் ஜெயின் கூறுவதாக பதிவாகியுள்ளது.

எனவே யாருக்கெல்லாம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினால் சமாளித்து விடுவார்கள் என்று பார்ப்பதற்காக, சோதனை முயற்சியாக 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதாக சிலரிடம் அரிஞ்சய் ஜெயின் கூறுவது பதிவாகியுள்ளது.

இதில் 22 பேருக்கு மூச்சுத்திணறி, உடல் நீலமாக மாறிவிட்டதாகவும், ஆக்சிஜன் இல்லை என்றால் அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என தெரிந்துகொண்டதாகவும் அரிஞ்சய் ஜெயின் கூறுவதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ பரவத் தொடங்கிய நிலையில், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் பரஸ் மருத்துவமனையில் 7 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


 

From around the web