தெலங்கானாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; கயிறு மூலம் காரை வீட்டுடன் கட்டி வைத்த ஓனர்..! வைரல் வீடியோ

 
Telangana

தெலங்கானாவில், மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருக்க வீட்டுடன் காரினை கயிறு கட்டி வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சிரிசில்லா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது மாருதி ஆல்டோ கார், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க அதன் 4 பக்கங்களிலும் கயிறு கட்டி வீட்டுடன் கட்டி வைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From around the web