வீட்டில் தனியாக இருந்த பெண் மற்றும் 4 வயது குழந்தை வெட்டி கொலை; சிசிடிவி உதவியுடன் கொலையாளிக்கு வலைவீச்சு

 
Begur

பெங்களூரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த 35 வயதான பெண் மற்றும் அவரது 4 வயது குழந்தை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பேகூர் என்ற பகுதியில் வசிக்கும் சன்னவீர சாமி வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில், அவரது மனைவி சந்திரகலா மற்றும் 4 வயது குழந்தை ரதன்யா ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்திரகலாவின் சகோதரி அந்த வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பெங்களூரு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் முருகன், கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

From around the web