முன்னாள் ஒன்றிய அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு

 
Salman-Khurshid

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்” எனும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சல்மான் குர்ஷித் இந்து மத கொள்கைகள் மற்றும்  ஐஎஸ்  பயங்கரவாத  இயக்கம், போக்கோஹராம்  பயங்கரவாத  அமைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. சல்மான் குர்ஷித்தின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக  டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராகேஷ் கபில் மற்றும் 20 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

From around the web