முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பதவில்,

மன்மோகன்சிங்கிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 88 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன்சிங், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web