ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் - மத்திய அரசு அறிவிப்பு

 
TET

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை அமலில் இருந்தது. இந்நிலையில் சான்றிதழை ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றம் செய்ய அண்மையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் முடிவெடுத்தது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2011-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மற்றும் இனி தேர்ச்சி பெறுவோர் என அனைவருக்கும் சான்றிதழானது ஆயுட்காலம் வரை செல்லும்.

2012-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் தேர்ச்சி பெற்றுள்ள சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

மேலும் காலாவதியான சான்றிதழ்களை புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

From around the web