2வது முறையாக கொரனோ தொற்றுக்கு உள்ளான மத்திய சுற்றுச்சூழல் இனை அமைச்சர்!!

 
2வது முறையாக கொரனோ தொற்றுக்கு உள்ளான மத்திய சுற்றுச்சூழல் இனை அமைச்சர்!!

மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு நானகு லட்சத்தை நெருங்கி வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 2வது முறை தொற்று ஏற்பட்டுள்ளதால் மேற்கு வங்கத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியிலிருந்து இருமுறை எம்.பியாக தேர்வான பாபுல் சுப்ரியோ தற்போது அங்கு டோலிகங்கே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.


 

From around the web