18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்

 
Mansukh-Mandaviya

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா கூறியுள்ளார்.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா  ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் அவர் கூறியதாவது,

“பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.

தற்போது வரை 79 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 38 சதவீதம் பேர் 2-ம் தவணை செலுத்தி உள்ளனர். நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web